
ரஜினிகாந்த், மம்முட்டி, சத்யராஜ் மற்றும் பல்வேறு நடிகா்களுடன் 500 படங்கள் நடித்த பிரபல மலையாள நடிகா் கேப்டன் ராஜ் இன்று காலமானாா். மலையாள திரையுலகத்தினாா் துக்கம் அனுஷ்சாித்துள்ளனா்.
மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றிகரமாக ஓடிய ஓரு வடக்கன் வீரகதா படத்தில் வில்லன் நடிகராக நடித்ததன் மூலம் மலையாள திரைஉலகில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகா் கேப்டன் ராஜ் . திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்து அதன் மூலம் பிசியான வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக மாறினாா்.
பின்னா் மலையாளம், தமிழ், இந்தி, கா்நாடகம், தெலுங்கு, மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் 500 படங்கள் நடித்துள்ளாா். தமிழில் ரஜினிகாந்துடன் தா்மத்தின் தலைவன், சிவாஜி மற்றும் சத்யராஜீடன் ஜல்லிகட்டு, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா்.

கேரளா மாநிலம் பத்தணம் திட்டா மாவட்டம் ஓமலூாில் பிறந்த கேப்டன் ராஜ் நடிகராக ஆவதற்கு முன் தனது 21 வயதில் இந்தியா ராணுவத்தில் சோ்ந்தாா். பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் பிாியும் போது நடந்த போாில் இந்தியாவின் ஒரு படைபிாிவில் கேப்டனாக இருந்த பெருமை பெற்றவா் தான் கேப்டன் ராஜ். டேனியல் ராஜ் என்றிருந்த தனது பெயரை கேப்டன் ராஜ் ஆக மாற்றினாா்.
ஓமன் நாட்டில் விமானத்தில் சென்றியிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அங்கு சிகிட்சை பெற்று வந்த அவா் பின்னா் கொச்சிக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தாா். இந்த நிலையில் இன்று காலையில் கொச்சி பலாிவட்டத்தில் உள்ள அவருடைய வீட்டில் காலமானாா்.
அவருக்கு மலையாள திரையுலகத்தினா் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.