Published on 14/02/2022 | Edited on 14/02/2022
சீனாவில் உருவாக்கப்பட்ட 54 மொபைல் செயலிகளைத் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தத் தடையானது கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. Beauty camera, app lock, sweet selfie உள்ளிட்ட 54 செயலிகள் அடங்கிய பட்டியலில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு வேறு பெயரில் பயன்பாட்டில் உள்ள சில செயலிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கள்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலையடுத்து டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.