Published on 16/12/2019 | Edited on 16/12/2019

தமிழகம் முழுவதும் 72 ஆயிரம் காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கு மாதம் ரூபாய் 370 வழங்கப்படுவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூபாய் 30 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது.