Skip to main content

திமுகவுடன் கைகோர்க்கும் மா.செ.வை மாற்றுங்கள்..! அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முழக்கம்!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி அதிமுக தொண்டர்கள் இன்று காலை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபுவை மாற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

 

வெங்கடேஷ் பாபு வீடு உள்ள பகுதி எழும்பூர். அவருக்கும் வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதிக்கும் சம்மந்தமே இல்லை. ஆனால் அவரை மா.செ.வாக நியமித்துள்ளனர். பொறுப்பு கொடுத்தப் பின்னர் தொகுதிக்கு வருவதுமில்லை, எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதும் இல்லை, எங்களுடன் எந்த ஆலோசனையும் செய்யவதில்லை. 

 

திமுகவின் சேகர்பாவுடன் கைகோர்த்துக்கொண்டு தொகுதியில் அதிமுகவுக்கு எதிராகத்தான் வேலைப் பார்த்து வருகிறார். அவரை உடனடியாக மாற்றி, எங்கள் தொகுதிகளில் உள்ள ஒருவரை உடனடியாக மா.செ.வாக நியமிக்க வேண்டும். தொகுதிக்கு சம்மந்தமே இல்லாத ஒருவரை நியமித்ததால்தான் அவர் இந்தப் பக்கம் வருவதும் இல்லை, எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதும் இல்லை என்று முழக்கங்களை எழுப்பினர்.

 

பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அதிமுக தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்திடம் மனு கொடுத்தனர். அவர் மனுவை கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி சமாதானப்படுத்தி தொண்டர்களை அனுப்பி வைத்தார்.

 

திடீர் முற்றுகை போராட்டம் குறித்து அங்கு வந்த தொண்டர்களிடம் நாம் பேசும்போது, வெங்கடேஷ் பாபு மாவட்டச் செயலாளராக வந்த பிறகு வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் இதுவரை போடவில்லை. வட்டச் செயலாளர், பகுதி செயலாளர் இல்லாமலேயே எம்.பி. தேர்தலை சந்தித்தோம். அதனால்தான் தோல்வி அடைந்தோம். மேலும் அவர் திமுக சேகர்பாபுவின் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்றனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்