Published on 03/02/2021 | Edited on 03/02/2021
2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இரு கட்சிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சி மாறும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (03.02.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி, பா.ம.க. கட்சியின் மாநில இளம் பெண்கள் செயலாளரும் - சைதை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஜூலி, தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., கொளத்தூர் மேற்குப் பகுதிச் செயலாளர் ஏ.நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.