தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 32 பேருந்து பணிமனைகளில் இருந்து காலை 06.30 மணி வரை 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மண்டலத்தில் 77 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது வழக்கமாக இயக்கப்படும் 1298 பேருந்துகளில் 993 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூரில் இருந்து 73 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் 135 பேருந்துகளில் 99 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 97 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது வழக்கமாக இயக்கப்படும் 399 பேருந்துகளில் 387 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல்லில் இருந்து 100 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் 47 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை மண்டலத்தில் 95 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 1218 பேருந்துகளில் 1163 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மண்டலத்தில் 83 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 1927 பேருந்துகளில் 1599 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சியில் இருந்து 69 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் 396 பேருந்துகளில் 272 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தஞ்சாவூரில் இருந்து 72 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் 226 பேருந்துகளில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மண்டலத்தில் 72 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது வழக்கமாக இயக்கப்படும் 226 பேருந்துகளில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 93 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.