Skip to main content

ரொனால்டோவுக்கு வெறும் 20 வயசுதான்! - வியக்கும் மருத்துவக் குழு

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
ronaldo

 

கால்பந்தாட்டத்தின் தங்க மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 35வது பிறந்த நாள் இன்று. உலகெங்கும் இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஜூலை 2018ம் ஆண்டு அவரது உடலை ஆராய்ந்த மருத்துவக்குழு கூறிய தகவல், இன்றுவரை ஆச்சர்யத்தை உண்டாக்கிக்கொண்டேதான் இருக்கிறது.
 

போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மேட்ரிட் அணியில் இருந்து விலகி, ஜூவெண்டஸ் அணிக்கு ரூ.900 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்துகொண்ட தருணம் அது... அப்போது அவரது உடல்நிலையைப் பரிசோதித்துப் பார்த்த அந்த அணியின் மருத்துவக்குழு, ரொனோல்டோவின் உடற்கட்டு 20 வயது இளைஞனுக்கு ஒப்பாக இருப்பதாக தெரிவித்தது. 
 

அதற்கு முன்பு ஒருமுறை ரொனால்டோவின் உடற்கட்டு 23 வயதுக்கு ஒப்பாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அவரது உடலில் வெறும் 7% மட்டுமே கொழுப்பு உள்ளது, ஆனால் சராசரியாக ஒரு கால்பந்தாட்ட வீரருக்கு 10% இருக்கலாம். தசைகளின் எடை 50%, இது சராசரியை விட 4% அதிகம். உலகக்கோப்பையில் அதிவேகமாக ஓடிய ரொனோல்டோவின் அதிகபட்ச வேகம் 33.88கி.மீ. என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

204 நீர்நிலைகளைத் தூர்வாரிய பொக்லைனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
 youth celebrated birthday by cutting a cake for pokilin who diverted 25 water bodies!

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் புரட்டிப் போட்ட போது மீட்புப் பணிக்காக இளைஞர்களால் கைகோர்த்து தொடங்கிய கைஃபா என்ற அமைப்பு புயலால் சேதமடைந்த மரங்களை அகற்றி சீரமைத்த பிறகு டெல்டா மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களை சீரமைத்து நீர்நிலைகளை உயர்த்தவும் நிலத்தடி நீரை சேமிக்கவுமாக விரிவுபடுத்தப்பட்டது

பேராவூரணியில் தொடங்கி கல்லணை கடைமடை பாசனப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்திலும் பணி செய்ய பின்னர் தமிழ்நாடு முழுவதும் பணியை விரிவாக்கிக் கொண்டது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டை, கால்வாய்களை சீரமைத்து தண்ணீரையும் சேமித்து காட்டியுள்ளனர். இளைஞர்களின் சொந்த செலவிலும் தன்னார்வலர்களின் பங்களிப்பிலும் நீர்நிலை மராமத்துப் பணிகளை செய்து வரும் கைஃபா வின் செயல்பாடுகளைப் பார்த்து மில்க் மிஸ்ட் நிறுவனம் பொக்கலின் இயந்திரங்களை சொந்தமாகவே வாங்கிக் கொடுத்துவிட்டது. 

அப்படி  2019 ஆம் ஆண்டு மில்க் மிஸ்ட் நிறுவனம் வாங்கிக் கொடுத்த புதிய பொக்கலைன் இயந்திரம் முதன் முதலில் கீரமங்கலம் வண்ணான்குளத்தைச் சீரமைத்து முதல் பணியை தொடங்கி தற்போது 204 வது குளமாக பேராவூரணி ஆண்டிகாடு - பள்ளத்தூர் பெரியகுளம் ஏரியை தூர்வாரிக் கொண்டிருக்கிறது. மில்க் மிஸ்ட் நிறுவனம் கைஃபா வுக்கு இந்த வாகனத்தை வாங்கிக் கொடுத்த நாளை பிறந்த நாளாக கருதும் கைஃபா அமைப்பினர் அந்த நாளில் பொக்கலைன் எந்திரத்தின் பிறந்த நாளாக கருதி கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து கைஃபா அமைப்பினர் கூறும் போது, “இளைஞர்களின் கையில் இருந்த சிறு தொகையுடன் சின்னச் சின்ன பணிகளைத் தொடங்கி நீர்நிலைகளை சீரமைப்பதைப் பார்த்து ஏராளமான தன்னார்வலர்கள் தானாக முன்வந்து செலவில் பங்கெடுத்துக் கொண்டனர். பல ஆண்டுகளாக மராமத்து இல்லாமல் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த நீர்நிலைகளில் கைஃபாக தூர் வாரிய ஏரி, குளங்களில் தண்ணீர் நிரைந்திருப்பதைப் பார்த்ததுடன் அப்பகுதியில் நிலத்தடி நீரும் உயர்வதை மக்கள் கண்கூடாக கண்டனர். இதனைப் பார்த்த மில்க்மிஸ்ட் நிறுவனம் ஒரு பொக்கலைன் இயந்திரத்தை புதிதாக வாங்கி கைஃபாவிடம் ஒப்படைத்தனர். அந்தப் பொக்லைன் மூலம் இதுவரை 204 ஏரி, குளங்களை சீரமைத்து தண்ணீர் நிரப்பி சுற்றுச்சூழலை பாதுக்க ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடவும் உதவிய பொக்கிலின் கைஃபா வுக்கு வந்து 5 வருசமாச்சு. அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுகிறோம்” என்றனர்.

நீர்நிலை உயர உதவிய பொக்லைனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அவருடன் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன்' -பிரதமர் மோடி புகழாரம்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
'I fondly remember the conversations I had with him' - Prime Minister Modi's eulogy

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 101 பிறந்தநாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவக வளாகத்திற்குள் புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மூத்த அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டங்களை வழங்கி பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கலைஞருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,'கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் தனது அறிவார்ந்த இயல்புக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது, அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.