இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகாஷ் முரளியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா. இதில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்து பேசிய விஜய் ஆண்டனி, “சிநேகாவுக்கு அவரது கணவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது கனவு ‘நேசிப்பாயா’ படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.
என் நண்பர்கள்தான் விஷ்ணுவும் அனுவும். விஷ்ணுவின் ஸ்டைலிஷான இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகமாகிறார். அதிதியும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொங்கலில் வெளியாகும் இந்தப் படத்திற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக சூர்யா - கார்த்தி மாதிரி அதர்வா - ஆகாஷ் காம்பினேஷன் எதிர்காலத்தில் அமையும்” என்றார்.