Skip to main content

இயக்குநராக முதல் படம்; ஹாலிவுட் கலைஞரை களமிறக்கிய மோகன்லால்

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

Mohanlal commited hollywood artist Mark Kilian for directorial debut Barroz movie

 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், தற்போது லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' மற்றும் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பல்வேறு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

திரைத்துறையில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் 'பரோஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டில் தெரிவித்து படத்தின் பணிகள் 2021 ஆம் ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் மோகன்லால், பிரித்விராஜ், பிரதாப், பாஸ் வேகா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். 3டியில் வெளியாகவுள்ள இப்படத்தை 'ஆசீர்வாத் சினிமாஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இந்த நிலையில் இப்படத்தில் தென் ஆப்பிரிக்காவை சார்ந்த இசையமைப்பாளர் மார்க் கிளியன் இணைந்துள்ளதாக மோகன்லால் தெரிவித்துள்ளார்.  மார்க் கிளியன், ஹாலிவுட்டில் வெளியான 'பிட்ச் பெர்ஃபெக்ட்' மற்றும் 'டீப் ப்ளூ சீ 3' உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஏற்கனவே மோகன்லாலின் இயக்கத்தில் முதல் படமாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகிய நிலையில், தற்போது ஹாலிவுட் கலைஞர் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.