Published on 12/05/2025 | Edited on 12/05/2025

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் இப்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71வது பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திரைப்பிரபலமான ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் பதிலுக்கு எடப்பாடியும் ரஜினி உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.