Skip to main content

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் கமல் நடித்த படம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Kamal in Papanasam movie is ready to remake in Hollywood

 

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 2 நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 

 

இந்தியில் அஜய் தேவ்கனால் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆங்கிலம் உள்பட சீன மொழி உரிமையையும் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கொரிய, ஜப்பானிய மொழிகளின் உரிமையைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பேசப்படுகிறது.  

 

இப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு தான் என்கிறது மலையாளத் திரையுலக வட்டாரம். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.