Skip to main content

நெருக்கமாக இருந்த பெற்றோர்; தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்த்த சிறுவன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :38

Published on 26/08/2024 | Edited on 26/08/2024
asha bhagyaraj parenting counselor advice 38

நெருக்கமாக இருக்கும் பெற்றோரை பார்த்து தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்த சிறுவனுக்கு கொடுத்த  கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

ஒரு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், செல்போனில் ஆபாசப் படங்களை தொடர்ந்து பார்ப்பதாக கூறி அந்த பையனை பேரண்ட்ஸ் அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தனர். பெற்றோர் திட்டி பார்த்தாலும், அடித்து பார்த்தாலும் முதலில் பார்க்கமாட்டேன் எனக் கூறினாலும் திருப்பியும் அந்த வீடியோக்களை தான் அந்த மாணவன் பார்த்துள்ளார். 

நான் அந்த பையனிடம், உன் வயதில் இதெல்லாம் சகஜம் தான் என்று சொன்ன பின்பு, இருந்தாலும் எங்கிருந்து இந்த பழக்கம் ஏற்பட்டது என்று கேட்டபோது ஒரு நாள் அவனது பெற்றோர் நெருக்கமாக இருக்கும் போது பார்த்ததாகவும், அதை தனது நண்பர்களிடம் சொன்ன பிறகு,  இந்த மாதிரியான ஆபாசப் படங்களை அவர்கள் அனுப்பிய பிறகு தான் இந்த படங்களை பார்த்ததாகவும் கூறினான். அந்த வீடியோக்கள் பார்த்த பின் அது பிடித்துபோனதால் தொடர்ந்து பார்த்து குளிக்கும்போதும், சாப்பிடும்போதும், படிக்கும்போதும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றான். 

பெற்றோரிடமும், குழந்தைகளிடம் இடையே கம்யூனிகேஷன் இல்லாததால் தான் இந்த மாதிரியான பிரச்சனை வருகிறது. இந்த மாதிரியான விஷயங்களை குழந்தைகள், பெற்றோர்களிடம் கேட்கும் போது அதற்கு பதிலளிக்க வேண்டும். அது தான் பேரண்டிங். இந்த விஷயத்தில் அது இல்லாததால், பையன் பாதிக்கப்பட்டிருக்கிறான். 3, 4 மாதமாக ஆபாசப் படங்களை மட்டும் தான் பார்த்திருக்கிறான். பியூபர்ட்டியில் இருந்து செக்ஸ் எடுகேஷன் வரை அனைத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்தேன். ஆபாசப் படங்கள் அதிகம் பார்த்ததால் அது நினைப்பாகவே இருந்தான். அதனால் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் வரை தான் செக்சன் நடத்துவேன். ஏனென்றால் அதற்கு மேல் அவனுக்கு கான்சென்ட்ரேசன் இல்லை. அந்த 15 நிமிடத்திற்குள் என்ன சொல்ல வேண்டுமோ அதை எல்லாமே சொல்லிக் கொடுத்தேன். 

பெற்றோர் ஏன் அதை செய்கிறார்கள், உனக்கு அந்த வயது இல்லை என எல்லாமே ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தேன். இப்பொழுது புரிகிறது, இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் எனக் கூறி அந்த விஷயத்தில் இருந்து அவன் முழுமையாக வெளியே வந்துவிட்டான். இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு பேரண்ட்ஸ் குழந்தையிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.