16 ஆவது ஐபிஎல் சீசனின் 63 ஆவது லீக் போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய லக்னோ அணி 3 விக்கெட்களை இழந்து 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 89 ரன்களையும் க்ருணால் பாண்டியா 49 ரன்களையும் எடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் சார்பில் ப்ஹெண்ட்ராஃப் 2 விக்கெட்களையும் சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 59 ரன்களையும் ரோஹித் சர்மா 37 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்களையும் யஷ் தாக்கூர் 2 விக்கெட்களையும் மோஷின் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். நடப்பு சீசனில் தீபக் ஹூடா குறைந்த பட்ச சராசரியை வைத்துள்ளனர். அவர் 10 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 6.90 மட்டுமே சராசரியாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.