
சென்னை அருகே இரு இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மறைமலைநகர் என்ற பகுதிக்கு அருகில் 5 இளைஞர்கள் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகராறு இறுதியில் கொலையில் முடிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் விமல் (வயது22), ஜெகன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மறைமலைநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேசி வருகின்றனர். நண்பர்களோடு பேசி கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டு இரு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரு அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.