ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. எனவே, டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே, ஒரு பயிற்சி ஆட்டம் முடிந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆட ஆரம்பித்து, வேகமாக ரன்களை குவித்தது. ப்ரித்வி ஷா 40 ரன்களும், கில் 43 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள், மைதானத்திற்கு வந்த வேகத்தில் திரும்பி சென்றதால், 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும், ஜஸ்பிரிட் பும்ரா, அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். சேவாக் ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை கடந்த அவர், 57 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அசத்தினார். பும்ராவின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 194 ரன்கள் எடுத்து, கவுரவமான நிலையை எட்டியது.