Skip to main content

அர்ஜெண்டினா தப்புமா? மெஸ்ஸிக்கு வாழ்வா சாவா போட்டி!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018

உலக கால்பந்தாட்டப் போட்டி லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி இன்று குரேஷியாவை எதிர்கொள்கிறது.
 

messi

 

 

 

குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருக்கும் அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதும் லீக் போட்டி, இன்று நோவாகிரேட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் மட்டுமே அர்ஜெண்டினா அணி தொடரில் நீடிக்கும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தகுதிபெற்றிருக்கும் ஐஸ்லாந்து அணியுடன், அர்ஜெண்டினா ஆடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஒரேயொரு கோல் கூட அடிக்காமல், பெனால்டி சூட்டையும் மிஸ் செய்து ஏமாற்றினார். இதனால், அர்ஜெண்டினா அணிக்கு ஒரேயொரு புள்ளி மட்டுமே கிடைத்தது.
 


இந்நிலையில், குரேஷியாவுடனான இன்றைய போட்டியில் ஜெயித்தால் மட்டுமே அர்ஜெண்டினா அணியால் உலகக்கோப்பை கனவை நீட்டிக்க முடியும். குறிப்பாக குரேஷியா அணி அதன் முந்தைய ஆட்டமான நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில், 2 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் உலகக்கோப்பையில் ஐந்துமுறை மோதியுள்ளன. அதில் அர்ஜெண்டினா இரண்டு மற்றும் குரேஷியா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தில், கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்ற மெஸ்ஸியின் வாக்கு நிஜமாகுமா? அர்ஜெண்டினா அணி தொடரில் நீடிக்குமா? என்பது இன்றைய போட்டியின் இறுதியில் தெரிந்துவிடும்.