16 ஆவது ஐபிஎல் சீசனின் 68 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 176 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 58 ரன்களையும் டி காக் 28 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, தாக்கூர், நரேன் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இறுதிவரை களத்தில் போராடிய ரிங்கு 67 ரன்கள் எடுத்தார். ஜேசன் ராய் 45 ரன்களை எடுத்தார். லக்னோ அணி சார்பில் யஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். க்ருணால் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
நடப்பு தொடரில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் ரன் சேஸின் போது 7 இன்னிங்ஸ்களில் ஆடி 305 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 152.50 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 174.28 ஆகவும் உள்ளது. அதில் 4 முறை அரை சதம் அடித்துள்ளார். அதில் 20 முறை பவுண்டரிகளும் 22 முறை சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார்.