Skip to main content

சம்பளத்தை எதுக்கு உயர்த்தினீர்கள்? – மருத்துவர்கள் போர்க்கொடி

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
canada


இந்தியாவில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சாமானிய மக்கள் ஒரு புன்னகையோடு கடந்து செல்வார்கள். எவ்வளவு சம்பளம் தந்தாலும் பத்தலன்னு போராட்டம் பண்ற ஒரே இனம் இந்த அரசு ஊழியர்கள் தான்ப்பா என்பார்கள். அது இந்தியா மட்டுமல்ல உலகத்தில் பெரும்பாலான நாடுகளின் அரசு ஊழியர்கள் இப்படித்தான் உள்ளார்கள் என்பவர்களும் உண்டு. ஆனால் வித்தியாசமாக கனடா நாட்டில் நாங்க பார்க்கற வேலைக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என உயர்த்தப்பட்ட சம்பளத்தை குறைக்க வேண்டும்மென அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி ஆச்சர்யப்படவைத்துள்ளனர்.

கனடா நாட்டில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், அரசிடம் சம்பள உயர்வு கேட்டுவந்தனர். மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதை கனடா மருத்துவ அமைச்சகம் எதிர்த்ததோடு, அவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தினால் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை குறைத்துவிடலாம், அந்த தொகையை கொண்டு சம்பளத்தை உயர்த்தி வழங்கலாம் என தன் கருத்தை தெரிவித்தது. இதனை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தான் சம்பள உயர்வை எதிர்த்து ஒரு பொதுஇயக்கம் கனடாவின் க்யூபெக் நகர மருத்துவத்துறையில் உருவானது.

க்யூபெக் நகரில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, மருத்துவர்களுக்கு, மருத்துவ மாணவர்களுக்கு, பேராசிரியர்களுக்கும் சம்பள உயர்வு அளித்துள்ளது. இந்த சம்பளம் மிகவும் அதிகம். எங்களுக்கு அதிகமாக உயர்த்தப்பட்ட சம்பளத்தை குறைத்து அதனை மருத்துவத்துறையின் மற்ற பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்கள் புதியதாக உருவாகியுள்ள அமைப்பு.

க்யூபெக் மருத்துவ பொது அமைப்பு என்கிற மருத்துவ பணியாளர்கள் அமைப்பின் தலைவர் இசபெல்லா கூறும்போது, சம்பள உயர்வை குறைக்க வேண்டுமென 213 மருத்துவ பொதுப்பணியாளர்கள், 184 சிறப்பு மருத்துவர்கள், 149 மருத்துவர்கள், 162 மருத்துவ மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என 789 பேர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இப்படி அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை குறைத்து மருத்துவத்துறையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையில் இன்னும் அதிகப்படியான வசதிகள் செய்துதர வேண்டும், 76 நோயாளிகளுக்கு 1 நர்ஸ் என்ற கணக்கிலேயே க்யூபெக்கில் உள்ளார்கள் அதனால் நர்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனைக்குள் பணியாற்றும் செவிலியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து சிறப்பான முறையில் பணியாற்ற வழி செய்ய வேண்டும், நோயாளியாக வருபவர்கள் அதிகமாக செலவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களின் செலவுகளை குறைக்க வேண்டும், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைகள் நிறுத்தப்பட்டதை தொடர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவின் க்யூபெக் நகரில் மருத்துவ பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து 1.4 சதவிதம் உயர்த்தியும், மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களுக்கு 1.8 சதவிதம் உயர்த்தி சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் ஆண்டுக்கு 4,03,500 கனடா டாலர்கள் சம்பளமாக பெறுகின்றனர். மருத்துவர்கள் ஆண்டுக்கு 2,55,000 டாலர்கள் சம்பளமாக பெறுகிறார்கள் என்கிறது சம்பள விபரம்.

எங்களுக்கு அதிகப்படியான சம்பளத்தை வழங்குவதற்கு பதில், சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள், எங்கள் சம்பள உயர்வை காரணமாக்கி நோயாளிகளுக்கு தரப்பட்ட வசதிகளை நிறுத்துவதை அரசாங்கம் நிறுத்தி அதிகப்படியான வசதிகளை செய்து தர வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்கள். இந்த கடிதம் கடந்த பிப்ரவரி 25ந்தேதி எழுதப்பட்டது. இந்த கடிதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தீவிர ஆலோசனையில் உள்ளது கனடா அரசாங்கம்.

இதுவே இந்தியாவாக இருந்தால் ??????

சார்ந்த செய்திகள்