Skip to main content

காஷ்மீரில் நடந்தது சுதந்திரப் போர்; பாகிஸ்தான் ஊடகம் சர்ச்சை செய்தி...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

ghjghjghj

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகளில் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நேரத்தில் பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 'தி நேஷன்' என்ற ஊடகம், 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் சுகந்திர போராட்ட வீரர்கள் சுகந்திரத்திற்கான போரில் ஈடுபட்டனர். ஆனால் இதனை இந்திய அரசு தீவிரவாத சாயம் பூச நினைக்கிறது' என செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு பகுதி என்றும், தீவிரவாதிகளை சுகந்திர போராட்ட வீரர்கள் என்றும், தாக்குதலை சுகந்திர போர் என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த செய்தி பல்வேறு தரப்பிலும் பெரும் எதிர்ப்பை கிளப்பி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்