Skip to main content

ஒபாமாவுக்குப் பிடித்த இந்திய பாடல்...!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2019 ஆண்டு தனக்கு படித்த பாடல்கள், படங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் பட்டியலிட்டதுடன், "உங்களை ஒரு நீண்ட பயணத்தில் வைத்திருக்கவோ அல்லது ஒரு புத்துணர்ச்சியான தருணத்தை உணர வைக்கவோ இவை அனைத்தும் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

 

obamas-favourite-music-of-2019

 

 

அந்த பட்டியலில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட பிரதீக் குஹத் எழுதிய 'Cold/Mess' என்ற பாடல் இடம்பிடித்துள்ளது.  

 

இதைப்பார்த்து வியந்து உடனடியான ஒபாமாவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் பிரதீக் குஹத், "இப்படி நடக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இன்று என்னால் உறங்க முடியுமா என்றும் தெரியவில்லை.நன்றி பராக் ஒபாமா, நன்றி பிரபஞ்சம்" என பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

இசை நிகழ்ச்சியில் தாக்குதல்; சிதறிக் கிடந்த 260 உடல்கள்;கண்ணீர் வடிக்கும் எல்லை மக்கள்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Assault at concert venue; 250 bodies scattered; Tearful Israel

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருதரப்பும் மோதி வரும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை மீட்ட அரசு சாரா அமைப்பினர் இது குறித்து தங்களது வேதனையைப் பதிவு செய்துள்ளனர்.

 

ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்த சூப்பர் நோவா இசை நிகழ்ச்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட புத்தர் சிலையின் கீழ் நடனமாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 'அமைதிக்கான இசை நிகழ்ச்சி' என்று நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் குடிமக்களைத் தவிர வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டார்கள். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே சிறு விமானம் போன்ற கருவிகள் மூலமாக ஹமாஸ் குழுவினர் எல்லையைக் கடந்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் இறங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றனர் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

“ஒபாமாவின் பேச்சுக்கு காங்கிரஸே காரணம்” - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Nirmala Sitharaman condemns Obama's speech on PM Modi

 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.

 

அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார்.  அதே நேரத்தில் அமெரிக்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் அதிபர் ஒபாமா, “எனக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாகஜவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த காலத்தில் இந்தியா மீது இதுபோன்ற புகார்களை எழுப்பியது யார் என்பதனை உற்றுநோக்க வேண்டியது அவசியம். ஒபாமா ஆட்சிக் காலத்தில் தான் ஏமன், சிரியா, சவுதி, ஈராக் என 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். இந்தியாவை குறைகூறும் ஒபாமாவை அமெரிக்க மக்கள் எப்படி நம்புவார்கள். அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் சூழலில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் கருத்தும் வியப்பைத் தருகிறது. பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் இதுவரை அந்நாட்டின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது. அதில் 6 இஸ்லாமிய நாடுகளும் அடங்கும். பாஜகவை தேர்தலில் வீழ்த்த முடியாததால், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் அடிப்படை ஆதாரமற்ற தரவுகளை வெளிநாடுகளில் பேசி வருவதே ஒபாமா போன்றவர்களின் கருத்துகளுக்குக் காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.