Skip to main content

போலிசெய்திகளுக்கு முற்று புள்ளி;சிறை தண்டனையுடன் அபராதம்...

Published on 28/03/2018 | Edited on 28/03/2018
malaysia

 

தொழிநுட்ப உலகில் உண்மைகள் உடனுக்குடன் வெளிவருவதை போல சில போலியான செய்திகளும் வெளிவருகின்றன. போலி செய்திகளுக்கு முற்று புள்ளி வைக்க மலேசிய அரசு போலி செய்திகளுக்கு எதிரான சட்ட மசோதாவை அண்மையில் மலேசிய நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றியுள்ளது. அதன்படி செய்தித்தாள், தொலைக்காட்சி, இணயதளம், வானொலி என எந்த ஊடகத்தாலும் எழுத்து, வீடியோ,ஆடியோ என எந்த வடிவில் போலி செய்திகள் பரப்பப்பட்டாலும்  பத்து வருட சிறை மற்றும் என்பது லட்சம் ரூபாய் அபராதம் என சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. செய்தியானது முற்றிலும் போலியானது என்றாலும் அல்லது பாதி போலியானது என்றாலும் இந்த இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இதனால் போலி செய்திகள் குற்றத்திற்குரியது மற்றும் செய்திகளின் நம்பக தன்மையில் போலிசெய்திகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் மலேசிய அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் இந்த சட்டம்  போலி செய்திகளில் இருந்து மக்களை காக்க கருத்து சுதந்திரத்தை பாதுக்காக்கும் வகையில் உருவாக்கப்பட்டது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினால் மக்கள் இனி பகிரும் செய்திகள் உண்மையா அல்லது போலியா என கவனத்துடன் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

malaysia


 

அதேசமயம் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பலகோடி ஊழல் குற்றசாட்டுக்குள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் ஊழல் பற்றிய செய்திகளில்  ஊடகங்களின் வாயை அடைக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தரப்புகள் இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்த சட்டம் பத்திரிகை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.  ஆனால் ஆளும் கட்சியோ தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என கூறியுள்ளது.

 

மலேசியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் பத்திரிகை மீதான தாக்குதல் மற்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி என எதிர்க்கட்சி தலைவர் ஓங் கியான் மிங் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசின் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை சில வெளிநாட்டு ஊடகங்களும் வைத்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்காவிலும் விசாரணை நடந்து வருகின்ற நிலையில் இது தொடர்பான செய்திகளை மலேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிடக்கூடாது என மலேசிய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிட்டத்தக்கது.

மேலும்  சிங்கப்பூர்,பிலிப்பைன்ஸ் உட்பட தெற்காசிய நாடுகளும் இந்த போலி செய்திகள் மீது மலேசிய அரசு கொண்டுவந்த இந்த சட்டத்தை ஆதரித்தும் முன்மொழிந்தும் வருகின்றன.

சார்ந்த செய்திகள்