Skip to main content

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கு எங்கள் நாடு இல்லை - மலேசிய பிரதமர்...

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு மலேசியா பெரிய நாடு இல்லை என மலேசிய பிரதமர் மஹாதீர் தெரிவித்துள்ளார்.

 

malaysia pm about indias decision on palmoil import

 

 

ஜம்மு காஷ்மீர் விவகாரம், சிஏஏ ஆகியவற்றிற்காக இந்திய மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார் மலேசியா பிரதமர் மஹாதீர். சிஏஏ குறித்து பேசியிருந்த அவர், "மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது. மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதியில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றி வந்தது. இந்த நிலையில், இந்தியா தனது இறக்குமதியை நிறுத்தியதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இது தொடர்பாக லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மஹாதீர்,"இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு மலேசியா பெரிய நாடு இல்லை. இதனை சரி செய்யவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலேசிய பிரதமருடன் ரஜினி சந்திப்பு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

rajini meets malaysia pm

 

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 

சினிமாவைத் தாண்டி அவ்வப்போது பல்வேறு ஆளுமைகளை சந்திக்கும் ரஜினி, சமீபத்தில் இமயமலை பயணம் மேற்கொண்ட பிறகு தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன. 

 

அந்த வகையில் தற்போது மலேசியா சென்றுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அந்நாட்டு பிரதமர், "ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை சந்தித்தேன். எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் துன்பம் தொடர்பாக அவர் அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். ரஜினிகாந்த் தொடர்ந்து திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்" என ரஜினியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

மலேசியாவில் அஜித் ரசிகர்கள் சாதனை

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Ajith fans record in Malaysia

 

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

 

முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம், அடாவடி, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. இதனிடையே, மலேசியாவில் துணிவு பட வெளியீட்டை முன்னிட்டு அஜித்திற்கு 9.144 மீட்டர் உயரம் கோண்ட கட்அவுட் வைத்து அஜித் ரசிகர்கள் சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரம் கொண்ட கட்அவுட் யாரும் வைத்ததில்லை என்றும், அஜித்திற்கு தான் முதல் முறை என்றும் மலேசிய அஜித் ரசிகர்கள் சொல்கின்றனர். 

 

மேலும், ஒரு நடிகருக்கு அதிக உயரம் கொண்ட கட்அவுட் வைத்துள்ளதால் மலேசிய சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இதற்கான அங்கீகார சான்றிதழ் துணிவு பட மலேசிய உரிமத்தை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த கட்அவுட் புகைப்படத்தையும் சாதனை சான்றிதழையும் அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.