Skip to main content

தடுப்பூசி மேல் நம்பிக்கை வர ஜோ பைடன் கையாண்ட யுக்தி!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020
joe baiden

 

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதியளித்த நிலையில், மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுகாதார பணியாளர்கள், முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்தநிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். கரோனா தடுப்பூசி மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகத் தொலைக்காட்சி நேரலையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி குறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக ஜோ பைடன், இன்று, "நான் கோவிட் -19 தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். இதை சாத்தியமாக்க அயராது உழைத்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி. நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். அமெரிக்க மக்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். தடுப்பூசி கிடைக்கும்போது, அதை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்