Skip to main content

கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்! - விளக்குகளை அணைத்து வைத்த ஐஃபில் டவர்!!

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
eifel

 

 

 

உண்மைச் செய்திகளை உலகிற்குத் தெரியப் படுத்தியதன் விளைவாக பல்வேறு இன்னல்களை இன்றளவிலும் பத்திரிகையாளர்கள் சந்திக்கின்றனர். இதற்காக பத்திரிகையாளர்கள் பலர் உடைமைகளையும், உயிரையும் கூட இழக்க நேரிடுகிறது. 
 

 

 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் நகரின் அடையாளமாக இருக்கும் ஐஃபில் டவர் முன்பு, கொல்லப்படும் பத்திரிகையாளர்களை நினைவுகூரும் விதமாகவும், அதைக் கண்டித்தும் ஏராளமான பத்திரிகையாளர்கள் நவம்பர் 2 அன்று குழுமியிருந்தனர். இந்த ஒருங்கிணைப்பை பிரெஞ்சு என்.ஜி.ஓ. எல்லைகளற்ற நிருபர்கள் என்ற அமைப்பு முன்னின்று நடத்தியது. கூடியிருந்தவர்கள் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களின் புகைப்படங்களைக் கையிலேந்தி முழக்கங்களை எழுப்பினர். 
 

குறிப்பாக, சமீபத்தில் துருக்கி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, துண்டுதுண்டாக ஆக்கப்பட்ட பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஜமால் கஷோக்கியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. பிரெஞ்சு என்.ஜி.ஓ. எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். செய்திகள் வெளியிட்டதற்காக சிறையில் அடைக்கப்படுகின்றனர் என குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்விற்கு ஆதரவளிக்கும் விதமாக ஐஃபில் டவரின் மின்விளக்குகள் சில நிமிடங்கள் அணைத்து வைக்கப்பட்டன. 
 

சார்ந்த செய்திகள்