Skip to main content

மரணத்தை நெருங்கி மீண்டு வந்த அமெரிக்க சிறுவன் !!!

Published on 08/05/2018 | Edited on 09/05/2018

அமெரிக்காவை சேர்ந்த 13 வயது சிறுவன் 'ட்ரெண்டன் மெக்கின்லி' மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் வீட்டில் இருந்த காய்கறி எடுத்துசெல்லும் தள்ளுவண்டியை வேகமாக இழுத்துக்கொண்டே சென்றுள்ளான். அப்போது திடீரென கவிழ்ந்த காய்கறி வண்டி அவனின் தலையில் விழுந்து அவனின் மூளை மிகவும் சேதமடைந்தது. மருத்துவர்கள் பிழைப்பது சாத்தியமற்ற ஒன்று என்று கூறி கைவிரித்துவிட்டனர். மெக்கின்லி பெற்றோரும் அவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து படிவங்களிலில் கையொப்பம்மிட தயாரக இருந்தனர்.

 

Brain-dead boy comes back to life


ஆனால் அதற்கு முந்தைய நாள் மெக்கின்லி உடலில் ஒரு அசைவு ஏற்பட்டது மீண்டும் அவன் இந்த உலகத்தை பார்க்க வந்துவிட்டான். மருத்துவர்கள் மருத்துவ உலகில் இதுபோன்று ஒரு சம்பவம் நிகழ வாய்ப்பில்லை என்று ஆச்சரியத்தின் உச்சாணிக்கு சென்றுவிட்டனர். இதுகுறித்து மெக்கின்லி அம்மா கூறியது. "அவனுக்கு அந்த விபத்து நிகழ்ந்து அவனை மருத்துவமனையில் சேர்த்த அடுத்த 15 நிமிடங்களில் அவன் உயிர் பிரித்துவிடும் என்றுதான் எண்ணினேன். ஏனென்றால் அந்த அளவிற்கு அவன் மூளைப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தது. அப்படி அவன் பிழைத்தாலும் ஒரு அசைவுற்ற நிலையில்தான் அவன் வாழ்க்கை நகர்ந்திருக்கும். அதன் பின் நாங்கள் முடிவு செய்துவிட்டோம் அவன் நம்மை விட்டு பிரிந்துவிடுவான். அவன் உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தோம்.

 

மெக்கின்லி உடல் உறுப்புகள் ஐந்து குழந்தைகளுக்கு பொருந்தியது. ஆனால் தற்போது அதற்கான அவசியமில்லை மெக்கின்லி மீண்டும் வந்துவிட்டான் எங்களிடம். இது அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம்தான்" என்றுகூறினார். மருத்துவர்களும்   மெக்கின்லின் மீண்டு வந்ததை வியந்து பார்த்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறியது. "இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.  மெக்கின்லி மார்ச் மாதம் ஆரம்பத்திலிருந்து மூச்சை எளிதாக விடுகிறான். ஏற்கனவே இரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவதாக ஒரு அறுவை சிகிச்சை செய்தால் மெக்கின்லி முழுமையாக குணமடைந்துவிடுவான்" என்று கூறினர்.

சார்ந்த செய்திகள்