Skip to main content

சவுதி விமான நிலையத்தில் பயங்கர தாக்குதல்... உச்சகட்ட பரபரப்பில் சவுதி...(படங்கள்)

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான  நிலையத்தில் இன்று காலை வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

26 people injured in saudi airport attack done by houthi

 

 

ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த வான்வழித் தக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சை நடந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் அரசும் ஆதரவாக செயல்படுகிறது.

இந்நிலையில் சவுதி அரசை மிரட்டும் எண்ணத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய விமான நிலையம் மீது நடத்தப்பட்ட இந்த வான் வழி தாக்குதலால் சவுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்