Skip to main content

தலை நிற்காத போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்- சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Youths smashing vehicles intoxicated CCTV footage released shocking!

 

தலை நிற்காத போதையில் இளைஞர்கள் சாலையில் உள்ள வாகனங்களை தாக்கும் காட்சிகள் வெளியாகி மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மதிச்சியம் பகுதியில் சில இளைஞர்கள் மதுபோதையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சரமாரியாகத் தாக்கி உடைத்தனர். இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தில் சில சிசிடிவி கேமராக்களையும் அந்த இளைஞர்கள் தாக்கியது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து வாகனங்கள்  அடித்து நொறுக்கப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

போலீசார் விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது ரூபன் குமார், அரிசுரேஷ், பிரபு என்பது தெரியவந்தது மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதிகள் தஞ்சம் 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
newly married couple took shelter in Police  seeking protection

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரண். கோவிந்தசாமி தேங்காய் உரிக்கும் கூலி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்னை சரண் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். 

இதன் பிறகு ஊருக்கு வந்த இருவரையும் பெண் வீட்டார் கடுமையாக அடித்து துன்புறுத்தி ஊருக்குள் வரக்கூடாது எனத் துரத்தி அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஜோடி, திருமண கோலத்துடன் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளது. இது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Next Story

'ரூட் தல' பேனருடன் வந்த கல்லூரி மாணவர்கள்; தடுத்து நிறுத்திய போலீசார் 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
College students with 'Root Thala' banner; Stopped by the police

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு சில மாணவர்கள் பேருந்தில் பேனருடன் வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு கல்லூரியின் கேட்டையும் மூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் 'ரூட் தல' என்ற பேனருடன் பேருந்தில் வந்ததோடு ஊர்வலமாக செல்லமுயன்றனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் குறிப்பிட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து பேனரை பறிமுதல் செய்து அறிவுரை செய்த அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கிய நிலையில் அந்தந்த ரூட்டில் இருக்கக்கூடிய மாணவர்கள் ஒன்று சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிறோம் என்ற பெயரில் தாமதமான நேரத்தில் ஊர்வலமாக பேனர் மற்றும் மாலையோடு கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றனர். இதையறிந்த கல்லூரி முதல்வர் நுழைவாயிலை பூட்டுப் போட்டுவிட்டு சென்று விட்டார். அதனைத்தொடர்ந்து ஆவடியைச் சேர்ந்த சில மாணவர்கள் கையில் பேனர் உடன் ஊர்வலமாக செல்ல முயன்ற நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர்.