Skip to main content

திராவிட கட்சிகள் பாதையில் விஜய்?; நான்கு முறை சொன்ன அந்த வார்த்தை!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
vijay said about neet exam

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அதிகபெருபான்மை இடத்தை பிடித்து ஆட்சியில் அமர்ந்தது. அன்றிலிருந்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்றே தமிழக முதல்வர்,  தி.மு.க எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என தி.மு.கவினர் கூறி வந்தனர். அனைத்து மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா, எனவே மத்திய அரசை ஒன்றிய அரசே எனக் குறிப்பிட வேண்டும் என்று தி.மு.கவினர் கூறி வந்தனர்.

அந்த வகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடியின் வாழ்த்து கூறினார். அதற்கு முதல்வர், ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அரசின் முதல் அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் ‘ஒன்றிய அரசு’ என்று தி.மு.கவினர் குறிப்பிட்டு வந்தனர். இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும், தி.மு.கவை தொடர்ந்து அ.தி.மு.க, வி.சி.க, நாம் தமிழர் கட்சி என பிற கட்சிகளும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வந்தனர். 

இந்த நிலையில், மற்ற கட்சிகளின் வரிசையில், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய்யும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய விஜய், “நீட் தேர்வு என்பது மாநில உரிமைக்களுக்கு எதிரானது. குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட  வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள். 1975 க்கு முன்னாடி பார்த்தால் கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அதனை ‘ஒன்றிய அரசு’ பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள்.

ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது. தமிழக அரசு  சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ‘ஒன்றிய அரசு’ காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாக தீர்வு காண வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ‘ஒன்றிய அரசின்’ கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ‘ஒன்றிய அரசு’ அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மெடிக்கல் காலேஜ் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ ஆகிய நிறுவனங்களில் வேண்டுமானால் நீட் எக்ஸாம் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம்” என நான்கு முறை ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தையாக மாறிய விஜய்; சிறுமி செய்த செயலுக்கு விஜய்யின் ரியாக்‌ஷன்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Vijay's reaction to the girl's act in function

இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, விஜய் சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார். 

இதில் பரிசு பெற்ற மாணவியின் குடும்பத்தில் வந்த சிறுமி, முட்டி போட்டுக்கொண்டு விஜய்யிடம் பக்கொடுக்க காத்திருந்தார். இதனைப் பார்த்த விஜய், சில வினாடிகள், அந்தச் சிறுமியை நேருக்கு நேர் பார்த்தார். இதனையடுத்து, விஜய்யும் முட்டிப் போட்டுக்கொண்டு அந்தச் சிறுமி கொடுத்தப் பூவை வாங்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

“டாஸ்மாக் ஓபன் பண்ணி குடிக்கிறவங்கள என்கரேஜ் பண்றவங்க மத்தியில...” - மாணவியின் அசத்தல் பேச்சு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Student's amazing speech at vijay Award ceremony

இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கினார். 

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை,ட் திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பரிசு பெற்ற மாணவி ஒருவர் பேசுகையில், “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம ஒரு விஷயத்தை செய்யும்போது அதுக்கான பாராட்டு நமக்கு கிடைக்கிறப்ப தான் அதோட வேலியு (Value) தெரியுது. வாழ்க்கையில இன்னும் நிறைய செய்யனும்னு ஒரு மோட்டிவேஷன் (Motivation) கிடைக்குது. நம்ம மாநிலத்துல டாஸ்மாக் ஓபன் பண்ணி குடிக்கிறவங்கள என்கரேஜ் (Encourage) பண்றவங்களுக்கு மத்தில படிக்கிறவங்கள என்கரேஜ் பண்ற ஒரே கழகம்.. அது நம்ம தமிழக வெற்றிக் கழகம் தான். இதுதான் நமக்கு தேவையான மாற்றம். நம்ம தலைமுறைக்கு, ட்ரக்ஸ் (Drugs) இல்லாத சமூகத்தையும், எஜுகேஷனுக்கு (Education) முக்கியம் தர சமூகத்தையும் நம்ம விஜய் அண்ணா கொண்டு வருவாருனு நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கு. கண்டிப்பா அந்த மாற்றத்தை கொண்டு வருவீங்கனு நம்புறோம்” என்று பேசினார்.