திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், தேனி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ்(19) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நட்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் விமல்ராஜ் மாணவியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்ததால், அவரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து மாணவியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இளைஞரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அதன்பின் விமல்ராஜ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.