
தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில் ஒரு வீட்டின் முன் பகுதியில் கடந்த சில வாரங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியின் பின்னால் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த செடிகளுக்கு இடையே கஞ்சா செடியும் செழித்து வளர்ந்துள்ளது.
இதனை அந்த பகுதிக்கு கட்டிட வேலைக்குச் சென்ற சிலர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மத்தியபாகம் காவல் உதவி ஆய்வாளர் முத்து செல்வி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று செடியை பார்த்து அது கஞ்சா செடிதான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அந்த செடியை போலீசார் வேரோடு பிடுங்கி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் செடி வளர்த்த பெண்ணிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மலைவேம்பு என நினைத்து கஞ்சா செடியை அந்த பெண் வளர்த்து வந்தாக தெரிவித்துள்ளார். கஞ்சா செடியின் எடையைப் பொறுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி