Skip to main content

ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த ஓசூர் பொறியாளர் கைது!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் ஆபாசப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபி ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 


இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் காணாமல்போன மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம், தர்மபுரி மாவட்டத்தில் ஒருவர், சிறுமிகளின் ஆபாசப் படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் ஏடிஜிபியிடம் புகார் அளித்தது. 

videos upload hosur engineer arrested police

இந்தப் புகார் குறித்து விசாரிக்கும்படி ஏடிஜிபி ரவி, மேற்கு மண்டல சைபர் கிரைம் எஸ்பி சுஜித்குமார், தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். 


பேஸ்புக்கில் வந்திருந்த இணையதள இணைப்பின் ஐ.பி. முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில், தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சோழராஜன் மகன் சீனு (26) என்பவர்தான் சிறுமிகளின் ஆபாசப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, சீனுவை காவல்துறையினர் கைது செய்தனர். 


விசாரணையில் அவர் ஒரு பி.இ. பட்டதாரி என்பதும், ஓசூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. ஆபாசப் படங்களை அனுப்பப் பயன்படுத்திய செல்போனையும் காவல்துறையில் பறிமுதல் செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

பட்டாசு கிடங்கில் தீ விபத்து; சூழும் கரும் புகையால் மக்கள் அச்சம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Fireworks warehouse fire; People are afraid of surrounding smoke

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் என்ற பகுதியில் வடிவேல் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டாசுக் கிடங்கு ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வான வேடிக்கை பட்டாசுகள் மற்றும் சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் பல அடி உயரங்களுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vck ad

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஆனால் பட்டாசு குடோன் என்பதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்துச் சிதறுகிறது. இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்கு விபத்து காரணமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.