Skip to main content

மத்திய புலனாய்வு துறையின் விசாரணையில் வைகுண்டராஜன்!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

vai

வி.வி. மினரல் குழுமத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் மத்திய புலனாய்வுதுறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். 
 
கடந்த 25ம் தேதி காலை வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மகனின் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை போன்ற இடங்களில் அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தி வந்தனர். 

5வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் தொடர்புடைய வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் இன்று முடக்கம் செய்துள்ளனர். 

இந்நிலையில் மத்திய புலனாய்வு துறையினர் வைகுண்டராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது விடுவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. வைகுண்டராஜன் கைது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு நாள் ரெய்டு; விவி மினரல்ஸில் 8 கோடி பறிமுதல்; வருமானவரித்துறை தகவல்!!

Published on 01/11/2018 | Edited on 01/11/2018

 Six day raides; 8 crore seizure of VV Minerals; Income tax information !

கடந்த 25ம் தேதி காலை வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மகனின் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை போன்ற இடங்களில் அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தி வந்தனர். 

6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் தொடர்புடைய வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் இன்று முடக்கம் செய்துள்ளனர் என்ற தகவல் வந்ததை அடுத்து விவி மினரல் நிறுவனத்திற்கு ரூபாய் 1800 கோடிமுதல் 2500 கோடி வரை கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 800 கோடி ரூபாய் வரிஎய்ப்பு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள வருமானவரித்துறை 8 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

Next Story

வைகுண்டராஜன் நிறுவனம்... 30 வங்கி கணக்குகள், 24 வங்கி லாக்கர்கள் முடக்கம்... -வருமானவரித்துறை அதிரடி

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

கடந்த 25ம் தேதி வருமான வரித்துறையினர் வி.வி. மினரல்ஸ் மற்றும் வைகுண்டராஜனுக்கு  சொந்தமான இடங்களில் ஆய்வு நடத்தத் தொடங்கினர். இன்று வைகுண்டராஜன் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் 5ம் நாளாக தொடர்ந்து வருமான வரி சோதனை நடந்துவருகிறது. இந்நிலையில் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின்   30 வங்கி கணக்குகள், 24 வங்கி லாக்கர்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.