உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், செந்துறை திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் சம்பவத்தில் கொடூரர்களால் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளர்தங்கம் வரவேற்புரை ஆற்றினார். ஊராட்சி மற்ற தலைவர் செல்வ. கடம்பன் தொடக்கவுறை ஆற்றினார். மண்டல அமைப்பாளர் மணிவண்ணன், உள்ளிட்ட திராவிடர் கழக முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.