Skip to main content

நாக்கை அறுப்பேன் என பேட்டை ரவுடி போல் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சியில் புகார்

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

கரூர் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதி என்கிற பேச்சு தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது. 

 

mnm

 

இந்த நிலையில் நாக்கை அறுப்பேன் என்று மிரட்டல் விடுக்கும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருச்சியில் கண்டோன்மென் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட உறுப்பினர் வழக்கறிஞர் கிஷோர் கொடுத்துள்ளார். 
 

வழக்கறிஞர் கிஷோரிடம் இது குறித்து பேசிய போது, “கடந்த 13ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் சம்மந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது. கண்ணிய குறைவாகவும், வன்முறை தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பால் தமிழக அமைச்சராக தான் ஏற்றுக்கொண்ட உறுதி மொமொழிக்கு முரணான வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாக்கினை அறுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னுடைய பதிலாக பதிவு செய்துள்ளார். 
 

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அடிப்படை கருத்து சொல்ல ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தின் எங்கள் கட்சி தலைவர் கமல் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் தார்மீக உரிமை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து குடிமகனுக்கும் உள்ளது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பான எம்.எல்.ஏ. அமைச்சர் என்பதை எல்லாம் மீறி பேட்டை ரவுடி போல்  கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என பேட்டி அளித்துள்ளார். 

 

mnm

 

அந்த வீடியோவை பார்க்கும் போது அமைச்சரின் பேச்சு வரம்பு மீறி உள்ளது. இதே அமைச்சர் பாலில் கலப்படம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றம் அந்த விவகாரம் தொடர்பாக கருத்து சொல்ல இவருக்கு தடை விதித்திருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரின் இந்த பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளேன்” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்