Skip to main content

மணல் திருட்டால் உருவான பள்ளம்; பரிதாபமாக மரித்த மூன்று உயிர்கள்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
A crater formed by sand theft; Three lives tragically lost

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மணிகண்டன் என்பவர் கோவை மாவட்டம் சூலூர் போகம்பட்டி பகுதியில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில் வீட்டுக்கு அருகிலிருந்த குட்டையில் இறங்கி குளித்துள்ளார். அவருடன் பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது மகள் தமிழ்ச்செல்வி மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வரும் அண்ணன் மகள் புவனா ஆகியோரையும் மணிகண்டன் அழைத்து சென்றுள்ளார். குட்டையில் ஒரு இடத்தில் அதிக மணல் எடுக்கப்பட்டதால் பள்ளம் இருந்தது.

இதனை அறியாது அந்த பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மூவரும் பள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளிக்கச் சென்றவர்கள் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு மூன்று பேரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்