Skip to main content

இரவு விருந்தில் இடம்பெறும் தக்காளி ரசம், கவுனி அல்வா... காலையில் இட்லி, தோசை!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

இன்று மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கடற்கரை கோவில் கலைநிகழ்ச்சியில் ராமாயண காவியம் நடன வடிவில் அரங்கேற்றப்பட்டது. அப்போது ராமாயணக் காட்சி  குறித்து சீன அதிபருக்கு அவ்வப்போது எடுத்துரைத்தார் பிரதமர் மோடி.

 

Tonight's tomato sauce featuring dinner, Kauni Allah ... Idli dosa in the morning!


ராமாயணத்தின் சிறப்பு மிக்க காட்சிகளை கலைஞர்கள் அரங்கேற்றியதை மோடியும்,சீன அதிபரும்  கண்டு ரசித்தனர். அதன் பிறகு நாட்டியம் நிகழ்த்திய கலைக் குழுவினருடன் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

Tonight's tomato sauce featuring dinner, Kauni Allah ... Idli dosa in the morning!


அப்பொழுது சீன அதிபருக்கு நினைவுப்பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பரிசாக வழங்கினார். தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த பரிசுப் பொருளை அவர் வழங்கினார்.

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்தாக தமிழக பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் பாரம்பரிய சைவ, அசைவ உணவுகள் இரவு விருந்தில் இடம்பெற இருக்கின்றன. இரவு விருந்தில் பிரதமர் மோடி, சீன அதிபருடன் இருநாட்டு தரப்பினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். சீன அதிபருக்கு தமிழகத்தின் தக்காளி ரசம், சாம்பார் குருமா, கவுனி அரிசி அல்வா வழங்கப்படுகிறது.

 

Tonight's tomato sauce featuring dinner, Kauni Allah ... Idli dosa in the morning!

 

அதேபோல் காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளும், அனைத்து பாரம்பரிய உணவு வகைகளும் இதில் இடம்பெறுகின்றன. நாளை காலை உணவாக தமிழகத்தின் இட்லி, தோசை, பொங்கல், பூரி உள்ளிட்ட உணவுகள் இடம் பெறுகின்றன.
 

சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை மத்திய கைலாஷ் ராஜீவ்காந்தி சாலையில் இரவு 7.15 முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

Tonight's tomato sauce featuring dinner, Kauni Allah ... Idli dosa in the morning!

 

 

சார்ந்த செய்திகள்