Skip to main content

எந்த குற்றவாளியும் தப்பித்துவிட முடியாது- அ.தி.க திவாகரன்

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
thivakaran


கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் உண்மையை யாரும் மறைக்க முடியாது என்றும், குற்றவாளிகள் தப்பித்துவிட முடியாது என்றும் அ.தி.க பொதுச் செயலாளர் திவாகரன் கூறியுள்ளார்.
 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திவாகரன், கைது செய்யப்பட்டதோடு இந்த விவகாரம் முடிந்துவிட வில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாம், அனைத்து விஷயங்களுக்கும் பதில் சொல்லும் அ.மா.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார். 
 

‘இந்திய அரசியல் அமைப்பில் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் தண்டிக்கப்படுகிறார்கள். எத்தனை முதலமைச்சர்கள், மத்திய மந்திரிகள் குற்றவாளிகாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என்பதை பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். தற்போதைய காலகட்டத்தில் எதையுமே மறைக்க முடியாது. இதில் எந்த குற்றவாளியும் தப்பித்துவிட முடியாது என்ற நிலைமை இருக்கிறது. ஆனால், அதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும்’ என்றார்.
 

இதனையடுத்து அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, வந்த செலவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார் திவாகரன். ‘கிட்டத்தட்ட அங்கு ஒரு மிகப்பெரிய ஒரு குழு இருந்தது. அதில் ஒரு பத்து பேர்தான் சசிகலாவின் குடும்பத்தினர். அங்கு எப்படி ஒன்றரை லட்சம் பேரை கொண்டு சசிகலா வைத்திருக்க முடியும். இதெல்லாம் குற்றச்சாட்டுகளுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். இதை தரங்கெட்ட விமர்சனம் எல்லாம் செய்யக்கூடாது. இதை சிலர் பெரிய அளவில் எடுத்துகொண்டு வியாக்கியானம் பேசுகிறார்கள். அதன்பின் நானே விசாரித்தேன், யாரெல்லாம் அங்கு வந்து சாப்பிட்டார்கள் என்று பின்னர், பல மந்திரிகள், உயரதிகாரிகள், அவர்களின் பிஏக்களும் சாப்பிட்டனர்’ தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்