விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தி.மு.க.வினர் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆனது வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியிலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DSC_50026.jpg)
இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தி.மு.க.வினர் மற்றும் அ.ம.மு.க.வின் முன்னாள் யூனியன் சேர்மன் காளிமுத்து, ம.தி.மு.க. சுயேச்சை வேட்பாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு, தாக்கல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)