Skip to main content

பிரமாண்ட கலச தரிசனமும், பிரமிக்கவைக்கும் கலசத்திலிருந்து தரிசனமும்..! தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு படங்கள்.

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடப்பதால் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். எட்டாவது காலயாக பூஜை, ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவையுடன் குடமுழுக்கு நடந்தது. 


தஞ்சை பெரிய கோயில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது. ராஜகோபுரம், அனைத்து விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன், வராகி, சண்டிகேஸ்வரர் விமானங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. 

படங்கள் : மகேஷ் குமார்

சார்ந்த செய்திகள்