Skip to main content

நடிகர் ரஜினிகாந்துக்கு தலைவர்கள் வாழ்த்து!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

tamilnadu cm and other politicians wishes to actor rajinikanth for the awards

 

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தாதாசாகேப் பால்கே விருதுபெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதாசாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ  இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக, இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' பெறும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருதுபெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! 

 

தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

“அவுங்களை சாகுற வரைக்கும் ஜெயில்ல போடணும்” - ரஜினிகாந்த் ஆவேசம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
rajinikanth latest speech

சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதில் மருத்துவமனை குறித்தும் தனது உடல் நலம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். 

அதன் ஒரு பகுதியாக, “25 வருஷமா நான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு. அந்த நிறுவனத்துடன் ரஜினிகாந்த பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினியுடைது தான் அவருடைய பினாமியில் நடத்துறாங்க என சொல்லுவாங்க. 

என் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைஞ்சிருக்கு. அதனால் டாக்டர்கள், நர்சுகள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்களின் உதவியினால் தான் நான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஃப்ளாட்ஸ்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது, பக்கத்திலே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல்,  மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்கிறார்கள். ஆனால் மருத்துவமனை இருக்கு என யாருமே விளம்பரம் செய்வதில்லை. அது எல்லாத்தை விட மருத்துவமனை தான் முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.