Skip to main content

நியூடெல்லி ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
Ayyakkannu



தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 350க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் நியூடெல்லி ரயில் நிலையம் சென்றடைந்தனர். அங்கு வந்து இறங்கிய பின்னர், நியூடெல்லி ரயில் நிலையம் வந்த ஒரு ரயிலையும், ரயில் நிலையத்தில் இருந்து புறப்புட தயாராக இருந்த ஒரு ரயிலையும் மறித்து கோசம் போட்டு கோரிக்களை வலியுறுத்தி ரயிலை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

 

அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்தில் இருந்து 30 இலட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு தம் கோரிக்கையை முன்னிறுத்தி தலைநகர் டெல்லியில் 2018 நவம்பர் 29,30 ஆகிய தேதிகளில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தில் இருந்து விவசாயிகள் டெல்லி சென்றனர்.

 

காலை 7 மணிக்கு ஜி.டி. எக்ஸ்பிரஸ் மூலமும், 7.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலமும் நியூடெல்லி ரயில்வே நிலையத்திற்கு சென்ற விவசாயிகள் நியூடெல்லி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர். 

 

Ayyakkannu



பின்னர் போலீசாரால் அங்கிருந்து பேச்சுவார்த்தை மூலம் அப்புறப்படுத்தப்பட்டு நியூடெல்லி ரயில்வே ஸ்டேஷன் - ராம்லீலா மைதானம் வரை அரை நிர்வாண கோவணத்துடனும், இறந்த விவசாயிகளின் மண்டை ஓடு, எழும்புகளுடன் ஊர்வலம் நடத்தினர். 
 

ஊர்வலத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில், மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி எம்.சி. பழனிவேல், மாநில செயலாளர்கள் வந்தவாசி தினேஷ், முருகன், கடலூர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் சென்னை மாவட்டம் ஜோதிமுருகன், விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் சண்முகம், கோவை மாவட்டம் படிஸ்வரன், திருச்சி மாவட்டம் பொன்னுசாமி, கரூர் மாவட்டம் சரவணன், திருவள்ளூர் மாவட்டம் நாககுமார், தஞ்சாவூர் மாவட்டம் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், மற்றும் மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயகள் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்