Skip to main content

பிரச்சாரம் ஓய்ந்தது - 100 சதவீதம் பட்டுவாடாவை முடித்த கட்சிகள்

Published on 03/08/2019 | Edited on 03/08/2019


வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.   களத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களோடு சேர்த்து 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் உள்ளன. வேலூர் தொகுதி மக்கள் தங்களது எம்.பியை தேர்வு செய்வதற்கான வாக்குபதிவு ஆகஸ்ட் 5ந்தேதி நடைபெறவுள்ளது.

 

s


இதற்காக திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்துவந்துள்ள நிலையில், வாக்காளர்களை கவர்வதற்காக, ஓட்டுக்கு கவனிப்பும் செய்ய துவங்கின. அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், ஒரு ஓட்டுக்கு 300 ரூபாயும், திமுக ஒரு ஓட்டுக்கு 200 ரூபாயும் பட்டுவாடாவை ஜீலை 29ந்தேதி முதல் செய்யத்துவங்கின. பார்ட் பார்ட்டாக கவனிப்புகள் நடைபெற்றன. கடந்த ஆகஸ்ட் 2ந்தேதியோடு இரண்டு கட்சிகளும் 100 சதவித ஓட்டுக்கும் கட்சிதமாக வாக்காளர்களை கவனித்து முடித்துவிட்டன.

 

c


தனியாக ஒரே தொகுதிக்கு மட்டும் நடைபெறும் தேர்தல் என்பதால், இதற்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் கவனித்தது போல் அதிகளவில் கவனிப்பு நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதனை பொய்யாக்கும் விதத்தில் சொற்ப அளவில் கவனித்துள்ளனர்.


திமுக, அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் எதுவும் கவனிப்பில் ஈடுப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சார்ந்த செய்திகள்