Skip to main content

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட நபர் கைது...

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

கடந்த 8-ம் தேதி இரவு 8.30 மணிக்கு களியக்காவிளை சந்தைவழி போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திருவிதாங்கோடு அப்துல் சமீம், இளங்களைட தௌபீக் இருவரையும் எஸ்.பி ஸ்ரீநாத் தலைமையிலான 10 தனிப்படைகள், கியூ பிரிவு, உள்பாதுகாப்பு பிரிவு போலீஸார் கேரளா போலீஸாருடன் இணைந்து தேடிவந்தனா்.

 

ssi wilson case main accused arrested

 

 

இந்த தேடுதலின் போது, கா்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கர்நாடக போலீஸ் இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தடைசெய்யப்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த மன்சூர், ஜெபிபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷாவை தற்போது பெங்களூருவில் போலீசார் கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக எம்.பி. வில்சன் வைத்த கோரிக்கை; நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர்

Published on 19/11/2022 | Edited on 23/11/2022

 

DMK MP Wilson's request! Central Minister who took action!

 

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் சுமார் 700 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  

 

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. வில்சன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து வில்சனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் மத்திய அமைச்சர்.  

 

DMK MP Wilson's request! Central Minister who took action!

 

இதுகுறித்து திமுக எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பதிவில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு சிறிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு தற்போது பதிலளித்திருக்கும் ஒன்றிய அமைச்சர் 'நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணமானது பொது நிதியுதவி திட்டங்களில் 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

சாலைப்பயனாளர்களின் சுமையைக் குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறை சிறிய கட்டணமாக வசூலித்துக் கொள்ள ஆவண செய்யுமாறு ஒன்றிய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் திமுக எம்.பி. வில்சன்.

 

 

 

Next Story

"முதலமைச்சரைக் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை..." - வில்சன் எம்.பி. பேட்டி

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

"Next step in consultation with chief Minister..." - Wilson MP Interview!

 

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், 10% இட ஒதுக்கீட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். எனினும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் எதிராக தீர்ப்பளித்துள்ளனர். 

 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், "முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுவர். இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புக்கான திட்டம் கிடையாது. தமிழக முதலமைச்சரைக் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிற வகுப்பிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இருப்பதால், உயர் வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு தரக் கூடாது என வாதிட்டோம். 

 

33% உள்ள உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தரப்படும் பட்சத்தில் 1:3 என்ற அடிப்படையில் முன்னிலை கிடைத்துவிடும். சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" எனத் தெரிவித்துள்ளார்.