Skip to main content

சென்னையில் M.P., M.L.A.க்கள் மீதான வழக்கு விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
Special Court Opening mp mla


 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி குலுவாடி ரமேஷ் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைத்தார். இந்த விழாவில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

    
மத்திய அரசு முடிவெடுத்ததையடுத்து சென்னையில் சிறப்பு நீதிமன்றத்துக்கான அரசாணையை செப்டம்பர் 6-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி சென்னையில் தனி நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்றங்களை போல தனி நீதிமன்றம் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 

உத்திரப்பிரதேசத்தையடுத்து தமிழ்நாட்டில்தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அதிகம் உள்ளது. 

 

 

 



 

சார்ந்த செய்திகள்