திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக வசந்தி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக வக்கீல் தியாகு என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பெண் ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆய்வாளர் வசந்தி வக்கீல் தியாகுவை தாக்கியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த போலீஸ்காரர்களும் வக்கீல் தியாகுவை தாக்கியுள்ளனர். இதில் ரத்த காயம் அடைந்த தியாகுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல் அருகிலுள்ள திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dri.jpg)
காயமடைந்த தியாகுவை உடனடியாக சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் 100கும் மேற்பட்டோர் திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர துணை கண்காணிப்பாளர் மணிமாறன் வக்கீல்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து ஒரு மணி நேர சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kl_0.jpg)
இதனைத் தொடர்ந்து ரத்த காயம் அடைந்த தியாகு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். சம்பந்தப் பட்ட ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்நிலையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வசந்தி வக்கீல் தியாகு தன்னை தாக்கியதாக திண்டுக்கல் நகர் வடக்கு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல் வக்கீல் தியாகு அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வசந்தி தன்னை தாக்கியதாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரண்டு புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)