Skip to main content

’எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இது கஷ்டமான பொங்கல்’-செந்தில்கணேஷ், ராஜலட்சுமி உருக்கம்

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
r

    

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மறைந்த தோழர் எஸ்.பி.முத்துக்குமரன் நினைவு மன்றத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள், மரக்கன்றுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சுமார் 15 ஆயிரம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்சியின் தொடங்கவிழா மற்றும் பொங்கல் விழா நெடுவாசல் கடைவீதியில் உள்ள முத்துக்குமரன் கலையரங்கத்தில் ஓய்வு டி.எஸ்.பி மாணிக்கவாசகம் தலைமையில் நடந்தது. 

 

n

 

இந்த விழாவில் மரம் வளர்ப்போர் சங்கம் தங்க கண்ணன், அட்மா காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி தம்பதிகளும் கலந்து கொண்டு,  எங்களை போன்ற நாட்டுப்புற கலைஞர்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது இந்த நெடுவாசல் போராட்டக் களம். வெளிநாட்டிலும் இங்கு பாடிய அந்த போராட்ட பாடல் ஒலித்திருக்கிறது என்பதை மற்றவர்கள் சொல்ல கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு எங்களை வெளிக்காட்டியது விஜய் டி.வி. எல்லாம் உங்களைப் போன்றோர்களின் பேராதரவால்தான் என்று பேசிவிட்டு போராட்டக் களத்தில் கர்ப்பிணியாக நின்று பாடிய பாடலை பாடிவிட்டு ஏ மச்சான் பாடலை பாடி திரண்டிருந்த மக்களின் கரகோஷங்களை ஏற்றனர். 

 

n

 

பிறகு செந்தில்கணேஷ் கூறும் போது.. எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இது கஷ்டமான பொங்கல் என்று தான் சொல்ல வேண்டும். கஜாவின் தாக்கத்தால் விவசாயத்தை இழந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நம்பிக்கையுடன் பயணம் செய்கிறோம். அதனால் தான் இந்த ஆண்டு நல்லதாக அமையும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. கஜா பாதிப்பு பற்றி விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பாடல்களை விரைவில் வெளியிடுவோம் என்றார்.

 

தொடர்ந்து பேசிய ராஜலெட்சுமி.. இது கசப்பான பொங்கல் என்று சொல்ல முடியாது. விவசாயிகளுக்கு பெரிய இழப்பு தான். ஆனால் நம் விவசாயிகள் மண்ணை பொன்னாக்கும் வல்லமை படைத்தவர்கள். அந்த சக்தி இன்றும் நம் விவசாயிகளிடம் உள்ளது. தன்னம்பிக்கை இருப்பதால் தான் இப்போது மரங்களை வளர்க்க கன்றுகளை நடத் தொடங்கிவிட்டார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.  இப்போது தொடங்கியுள்ள மரக்கன்று நடுதல் விரைவில் வளரும் நம் விவசாயிகள் எழுவார்கள். அதனால் இந்த பொங்கலும் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் தான். விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் பயணிப்பார்கள் என்றார். 
        


 

சார்ந்த செய்திகள்