Published on 08/11/2018 | Edited on 08/11/2018

சர்கார் திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டிருந்தன. படம் வெளியான பின்பு அதில் நிறைய சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கின்றன. என அதிமுக சார்பில் எதிர்ப்பும், போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், சர்கார் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்.