கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காதல் விவகாரத்தில் இரு தரப்பினர் கடுமையாக மோதி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
போச்சம்பள்ளி, அகரம் கிராமத்தைச் சேர்ந்த சுகவனேஸ்வரன் என்பவரை ஐஸ்வர்யா என்பவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென ஐஸ்வர்யா வீட்டிலிருந்து வெளியேறி சுகவனேஸ்வரனை தேடிச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யாவின் வீட்டார் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட இளைஞர் வசித்து அகரம் கிராமத்திற்கு சென்று அவரை தேடி வந்துள்ளனர்.
அப்போது அந்த நேரத்தில் வெளியே வந்த வேறு ஒரு இளைஞரை சுகனேஸ்வரன் என நினைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஆனால் தாக்கப்பட்ட இளைஞர் வேறொரு நபர் என தெரியவந்தது. பின்னர் மீண்டும் சுகவனேஸ்வரனை தேடி கண்டுபிடித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். அதேபோல் தாக்குதல் நடத்த வந்த 20 பேரை அகரம் கிராமத்தினர் சுற்றிவளைத்து பதிலுக்கு தாக்கினர். இதனால் போச்சம்பள்ளி அகரம் கிராமம் கலவர பூமியானது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு கலவரங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தற்போது வரை 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.