Skip to main content

திமுகவின் ஊராட்சி சபா கூட்டம்- உடனடி நடவடிக்கை –எம்.எல்.ஏவை பாராட்டிய மக்கள்

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
ra


மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்கிற திட்டப்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்துகிறது.  திமுக. எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதிகளிலும், எம்.எல்.ஏக்களாக இல்லாத தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் தமிழகத்தில் உள்ள 12528 ஊராட்சிகளில் இந்த கூட்டத்தை நடத்துகின்றனர். பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு பொங்கல் முடிந்ததை தொடர்ந்து மீண்டும் தொடங்கியுள்ளது.


திமுகவின் வேலூர் கிழக்கு மா.செவும், இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவுமான காந்தி, கடந்த 9ந்தேதி தனது தொகுதியில் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கினார். வாலாஜா ஒன்றியம் படியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி கூட்டம் நடைபெற்றபோது, அந்த கூட்டத்தில் மாற்று திறனாளியான மீனா, எனக்கு கால் ஊனம், 3 சக்கர வண்டிக்கேட்டு அரசாங்கத்திடம் பலமுறை மனு தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நீங்களாவது அதிகாரிகளிடம் கூறி எனக்கு ஒரு மூன்று சக்கர வண்டி வாங்கி தாங்கள் எனக்கேட்டார். அந்த மனுவை வாங்கி தனது உதவியாளரிடம் தந்து உடனே ஏற்பாடு செய் என உத்தரவிட்டார்.

 

r


அன்று மாலையே மீண்டும் அந்த கிராமத்திற்கு வந்தார் காந்தி எம்.எல்.ஏ. மாற்று திறனாளி மீனா வீடு எங்க இருக்கு எனக்கேட்டார். மக்கள் அவரை அழைத்து வந்தனர். அவருக்கு புதியதாக மூன்று சக்கர சைக்கிளை தந்ததும் அந்த பெண்மணி, கண்ணீரில் நீரோடு நன்றி சொன்னார். இதைப்பார்த்து அக்கிராம மக்கள் ஆராவாரம் செய்தனர்.


இதைப்போல், செங்காடுமோட்டூர் என்கிற கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சிசபா கூட்டத்திற்கு சென்றார். அந்த கிராமத்தின், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் எம்.எல்.ஏ காந்தியிடம் வந்து, நாங்க அம்மூர் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினோம். அதை கட்டிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தர் இறந்துட்டாங்க. அவுங்க கடனை தள்ளுபடி செய்யாம அதை மீதியிருக்கின்ற எங்க 9 பேர்க்கிட்ட கேட்டாங்க. நாங்க கட்டல, அதனால எங்களோட 100 நாள் வேலைக்கான தினக்கூலிய பேங்க் அக்கவுண்ட்ல போடறாங்க. அதை பேங்க்காரங்களே கடனுக்குன்னு எடுத்துக்கறாங்க என கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர். அந்த பாக்கி 28 ஆயிரம் ரூபாயை நானே கட்டுறேன்.  நீங்க கவலைப்படாதிங்கம்மா எனச்சொல்லி கடனை கட்டியுள்ளார்.


இவரைப்போல் தமிழகத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏக்களும், கட்சி நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தவர்கள் மீட்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Redemption of those who used to work as slaves in brick kilns

ராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அந்தப் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களை வேலைக்கு வைத்து கொத்தடிமைகளாக நடத்தி வருவதாக வந்தத் தகவலை அடுத்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையிலான குழுவினர் செங்கல் சூலைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர் 

ஆய்வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த காமாட்சி(40) கார்த்தி(41) சத்யா(19) சீனு(17) சௌந்தர்யா(15) ஆகிய ஐந்து நபர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவது தெரியவந்து. இதனைத் தொடர்ந்து அவர்களை உடனடியாக  கோட்டாட்சியர்  மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த சேருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு முன்பணமாக ரூ.91 ஆயிரம் கொடுத்து செங்கல் சூளைக்கு வேலைக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது. 

வேலைக்கு வந்தவர்களிடம் அதிகப்படியான பணிச்சுமையைப் புகுத்தியதாகவும் அதற்கான உரிய ஊதியம் வழங்காமல் கொத்தடிமைகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து மீட்கப்பட்ட அனைவரும் அவர்களது சொந்தக் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செங்கல் சூளை உரிமையாளரான சுரேஷ்குமார் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.