Skip to main content

மீண்டு வாருங்கள் விஜய்.. ஆண்டவன் துணை இருப்பான்.. குழந்தைகளை பிரிந்துவாடும் தந்தைக்கு நேரில் ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

 

rajini

 

 

 

குன்றத்தூரில் பெற்ற தாயால் 2 குழந்தைகள் பாலில் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகளை இழந்து வாடும் குழந்தைகளின் தந்தையான விஜயை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

 

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையில் வசித்து வந்தவர்ள் விஜயகுமார் - அபிராமி தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கூடா நட்பு காரணமாக, கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை கொல்லதிட்டமிட்டு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் அபிராமி. அதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தன. கணவன் விஜய் தப்பினார். குழந்தைகளை கொன்று தப்பிய அபிராமி நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார். கொலை செய்ய ஆலோசனை சொன்ன சுந்தரமும் கைது செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  

 

 

இரண்டு குழந்தைகளையும் பரிகொடுத்த தந்தை விஜய் ரஜினி ரசிகர் மேலும் அவரின் குழந்தைகளும் ரஜினிகாந்த் போல பேசும், சைகை காமிக்கும். அது தொடர்பான அந்த இளந்தளிர்களின் படங்களும் வீடியோவும் பகிரப்பட்டன. இதனைத்தொடர்ந்து இன்று விஜயை  ரஜினிகாந்த் அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், எந்த ஆறுதலும் இந்த மிக கொடிய நிலைமைக்கு மருந்தாகாது என்ற நிலையில் இருந்தாலும் ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார் விஜய். மீண்டு வாருங்கள் விஜய். ஆண்டவன் துணை இருப்பான்.. வேறென்ன சொல்ல என ஆறுதல் சொல்லி வழியனுப்பி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
police action for Youth who tried to enter the vote counting center 

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது கடந்த 27 ஆம் தேதி (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அதோடு ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டது. 

police action for Youth who tried to enter the vote counting center 

இதற்கிடையே தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கொடுவாரூரியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி அருகில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று (29.04.2024) இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ. மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் வி.டி. நாராயனசாமியும், பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபாலும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.